Friday, April 26, 2024
Homeஇந்திய செய்திகள்10 வருடங்களாக நாப்கின் உற்பத்தி தொழில்...அசத்தும் மதுரை மகளிர் குழு பெண்கள்.

10 வருடங்களாக நாப்கின் உற்பத்தி தொழில்…அசத்தும் மதுரை மகளிர் குழு பெண்கள்.

மதுரையில் மகளிர் சுய குழுக்கள் இணைந்து கடந்த 10 வருடங்களாக நாப்கின் தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய குழுவின் தலைவர் பாண்டீஸ்வரி, “பாரிஜாதம் மகளிர் சுய குழு மூலம் நாப்கின் உற்பத்தி செய்து கொண்டிருந்தோம். அப்போது அரசு மூலமாக புதுயுகம் என்ற ஆர்டர் அறிமுகமானது. பிரசவத்தின்போது பயன்படுத்தப்படும் நாப்கின்களை முதலில் தயாரிக்க தொடங்கினோம். குழுவாக இணைந்து முதலில் பஞ்சுகளை கிரைண்டரில் போட்டு அரைத்து விடுவோம். பின்பு 5 செவ்வக வடிவ பாக்ஸில் 25 கிராம் பஞ்சை போட்டு நிரப்பி அதை பஞ்சிங் மிஷினில் பஞ்ச் செய்த பின்பு கேக் வடிவில் வரும்.

பிறகு ஓவன் மிஷினில் ப்ளூ ஷீட்டை வைத்து கம்ப்ரஸ் மிஷினில் கம்ப்ரஸ் செய்துவிட்டு புதுயுகம் பாக்கெட்டில் வைத்து சீல் செய்து விடுவோம். ஆர்டர்களை முடித்த பிறகு மதுரை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுவோம். ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்த ஆர்டரின் எண்ணிக்கை மாறுபடும். அந்த வகையில், முதலில் 9,333 பாக்கெட்களை கொடுத்துக்கொண்டு இருந்தோம். தற்போது 7,838 பாக்கெட்டுகளை கொடுத்து முடித்து விட்டோம்.

இதுபோக பிரசவம் பார்க்கப்படும்போது பயன்படுத்தப்படும் டெலிவரி மேட்டையும், டிஸ்போசபில் பெட்டன் பில்லோ கவர்களையும் தயார் செய்து தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுத்து வருகிறோம். மேலும் நாங்கள் செய்யும் நாப்கின்களை பார்க்கும் சில பேர் எங்களுக்கும் தனியாக தயார் செய்து தருவீர்களா என்று கேட்டகின்றனர். இதனால் மகளிர் சுய குழு மூலம் 5 பேர் இணைந்து தனியாக பேம்போ நாப்கின், ஆலுவேரா நாப்கின், அல்ட்ரா நாப்கின் என சுத்தமான காட்டன்களை வைத்து தயார் தயார் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் சுய குழுவின் மூலம் தயார் செய்தல், விற்பனை செய்தல் என 25 பேர் இந்த குழுவின் மூலம் பயன்பெற்று வருகிறோம்” என்று கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments