Friday, April 26, 2024
Homeவிளையாட்டுஸ்பெயினில் மூன்று இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் மூன்று இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதியே ஆண்களை உள்ளடக்கிய 6 பேர் கொண்ட அணியில் இருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது விளையாட்டு வீரரும் மறு நாள் காணாமல் போனதாக இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அசமந்தம் எனினும், இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் ஸ்பெய்ன் அதிகாரிகளுக்கு இலங்கை அதிகாரிகளால் தகவல் வழங்கப்பட்டபோதும், ஸ்பெய்ன் அதிகாரிகள் அதில் பெரிதும் அக்கறை கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை அதிகாரிகளிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை மல்யுத்த சம்மேளன தரப்புகள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தோம், ஆனால் காணாமல் போன வீரர்கள் நாட்டில் தஞ்சம் அடையலாம் என்றும், அவர்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாத வரை வேலை தேட முடியும் என்றும் ஸ்பெய்ன் அதிகாரிகள் பதிலளித்ததாக அந்த அதிகாரி கூறினார்.

அதேவேளை முன்னதாக, கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது ஒன்பது தடகள வீரர்களும் ஒரு அதிகாரியும் காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் கண்டுபிடிக்கபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments