Friday, April 26, 2024
Homeஉலக செய்திகள்விமான நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்...

விமான நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்…

பெங்களூரு-விமான பயணிக்கு ஹோட்டல் அறை ஒதுக்காத விமான நிறுவனம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்ட…

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கிஷோர், 54. டாக்டரான இவர், 2014ல் ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கிருந்து பெங்களூரு திரும்புவதற்காக ஜெர்மனியின் ஆர்லாண்டா
விமான நிலையத்தில் காத்திருந்தார்.

ஆனால் அவர் பயணிக்க வேண்டிய விமானம் தாமதமானது. இதனால் கிஷோர் தனக்கு ஹோட்டல் அறை ஒதுக்கி தரும்படி சம்பந்தப்பட்ட லுாப்தான்சா விமான நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் விமான நிறுவனம் ஹோட்டல் அறைக்கு ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் அவர் இரவு முழுக்க விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டி இருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த கிஷோர், பெங்களூரு நுகர்வார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

எட்டு ஆண்டாக நடந்த விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,
சேவை குறைபாடு மற்றும அலட்சியம் காட்டிய லுப்தான்சா விமான நிறுவனம், கிஷோருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments