Saturday, April 27, 2024
Homeசினிமாவாரிசு திரை படம் வெளியாகி 50வது நாள்..ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!

வாரிசு திரை படம் வெளியாகி 50வது நாள்..ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் வாரிசு படம் 50- வது நாளை எட்டியிருக்கும் நிலையில், மெகா பிளாக்பஸ்டர் வாரிசு என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது விநியோக நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ.

இயக்குநர் வம்ஷி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவர் 11-ம் தேதி வெளியான படம் வாரிசு.

ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

தில் ராஜு தயாரித்திருந்த இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகியிருந்தது.

தமன் இசையமைத்திருந்த வாரிசு படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments