Saturday, April 27, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் கடல் அட்டை வளர்ப்பு தொடர்பான நூல் வெளியீடு!

யாழில் கடல் அட்டை வளர்ப்பு தொடர்பான நூல் வெளியீடு!

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய “கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும்” நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தலைமையில் நூல் வெளியீடு இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் சூழலியலாளர், பொ.ஐங்கரநேசனும் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் ம.செல்வினும் கலந்துகொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் நூலை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை பொ.ஐங்கரநேசன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments