Saturday, April 27, 2024
Homeஉலக செய்திகள்மீண்டும் தலையெடுக்கும் ஹிட்லரின் நாசி படை ! பயத்தில் ஜெர்மனி ..

மீண்டும் தலையெடுக்கும் ஹிட்லரின் நாசி படை ! பயத்தில் ஜெர்மனி ..

ஹிட்லரின் நாஜிப்படை பல லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தது, இன்றும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. மனிதர்களின் கொடூர முகத்தை ஹிட்லர் வெளிப்படுத்தியதாக உலக வரலாறு கூறுகிறது. யூதர்களை சித்ரவதை செய்து கொலை செய்ய வேண்டும், அதேசமயம் ஜெர்மனியின் மருத்துவ ஆராய்ச்சியும் மேம்பட வேண்டும் என கான்சண்ட்ரேசன் கேம்ப்கள் எனும் சிறப்பு முகாம்களை அமைத்து யூதர்களை படுகொலை செய்தது மனித நாகரீகத்தின் கருப்பு பக்கங்களில் ஒன்று.

இரண்டாம் உலகப் போருக்கு பின் ஹிட்லர் வீழ்ந்த பின், ஜெர்மனி ஜனநாயகத்தை நோக்கி திரும்பியது. ஆனாலும் இன்றும் ஜெர்மனியில் வலதுசாரி தீவரவாதிகளான நாஜிப் படையினர், ஹிட்லரின் கனவை நிறைவேற்ற தீவிரவமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் ஜெர்மனியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் அதற்கு எடுத்துகாட்டாக உள்ளது. அதன்காரணமாக கடந்த 2020ம் ஆண்டு 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன் ஜெர்மனியில் உளவுத்துறை மற்றும் சிறப்பு படைகளில் 327 வலதுசாரி தீவிரவாதிகள் ஊடுறுவி உள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஜெர்மனியின் காவல்படைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஜெர்மனியின் ஜனநாயக ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்ட சுமார் 25 வலதுசாரி தீவிரவாதிகளை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இந்த நிகழ்வு நாஜிப் படைகள் மீண்டெழுவதை உணர்த்துவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சுமார் 3 ஆயிரம் காவலர்கள், ஜெர்மனியில் 130 பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனி அரசாங்கத்தை பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்ற இந்த தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை, ஆரிய தூய்மைவாத தீவிரவாதிகள் வைத்திருந்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் தூய்மைவாத தீவிரவாதக் குழுக்களை ரஷ்யா உருவாக்கிவருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தநிலையில், இன்றைய கைது சம்பவத்திற்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பு இல்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க ஜெர்மனியின் உள்நாட்டு விவகாரம் எனவும், கைது செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களில் ரஷ்யாவின் தலையீடு இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments