Wednesday, May 1, 2024
Homeஇலங்கை செய்திகள்மாவீரர் தின நிகழ்வுக்கு தடைவிதித்த காவல்துறை!

மாவீரர் தின நிகழ்வுக்கு தடைவிதித்த காவல்துறை!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சி குடிச்சாறு மார்வீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதை தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி இருக்குமாறும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் உப செயலாளர் பெருமாள் பார்த்தீபனிடம் நேற்று அறிவுறுத்தல் கடிதம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் கஞ்சிக்குடிச்சாறு புலிகள் இயக்கத்தின் மயானத்தில் புதைக்கப்பட்ட உயிரிழந்த புலிகளை நினைவு கூறும் வகையில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

29.08.2011 தேதியிட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1721(02) மூலம் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கம் தொடர்பான செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே இதனை மீறி இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டால் அறிக்கையின் பிரதி பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments