Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்மஹிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார் : உண்மையை உடைக்கும் முன்னாள் இராணுவதளபதி!

மஹிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார் : உண்மையை உடைக்கும் முன்னாள் இராணுவதளபதி!

இறுதியுத்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் பைத்தியம் பிடித்தது. மஹிந்தவை சிங்கப்பூரிற்கு அழைத்து சென்றனர் என முன்னாள் இராணுவ தளபதி அசித சரிவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நேர்காணலில்,

கேள்வி – இவர் ஆச்சரியத்திற்குள்ளாகும் தகவல்களை வெளியிடுகிறார் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர்.

பதில் – உண்மையில் எனக்கு பைத்தியம் என்றால் 157 ஆவது நபராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விக்கு பதில் கூற முடியுமா? அங்கு முப்படையினரை தூற்றி மஹிந்தவின் ஆட்கள் 44 பேர் கூறினர்.

நான்தான் அனைவரையும் காப்பாற்றினேன்.

கேள்வி – நீங்கள்தான் அனைத்தையும் செய்தீர்கள் என்றால், உங்கள் மீது மஹிந்தவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

பதில் – அதாவது 19வது கதை, மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். வெல்லவங்கவல விகாரை தேரரை சந்தித்து மஹிந்தவின் சூழ்ச்சி குறித்து கலந்துரையாடினேன். சியம்பலங்கமுங்வே யானையை கொன்று தந்தத்தை தலதா மாளிகைக்கு பூஜை செய்ய ஆயத்தமாக இருந்தனர்.

அந்நேரத்திலேயே, தேரர், மஹிந்தவுடன் தொலைபேசியினூடாக பேசிய போது, மஹிந்த தேரரை கோபத்துடன் திட்டி தொலைபேசியை துண்டித்து விட்டார். பின்னர் மஹிந்த நாட்டை விட்டு சென்றுள்ளார். உண்மையில் மஹிந்தவிற்கு பைத்தியம் பிடித்தது. மஹிந்தவை சிங்கப்பூரிற்கு அழைத்து சென்றனர்.

உண்மையில் நாட்டில் யார் யார் எவ்வாறு மாறுவார்கள் என்பது நமக்கு தெரியாது. குழப்பங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றன. – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments