Friday, April 26, 2024
Homeஉலக செய்திகள்மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட ஆப்கான் பெண்களுக்கு அனுமதி? தலிபானின் புதிய வழிகாட்டல்கள்.

மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட ஆப்கான் பெண்களுக்கு அனுமதி? தலிபானின் புதிய வழிகாட்டல்கள்.

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கும் வகையிலான புதிய வழிகாட்டல்களை வரைவதற்கு திட்டமிட்டுள்ளதாக தலிபான் அமைச்சு தெரிவித்துள்ளது.

சில மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளித்து புதிய வழிகாட்டல்களை வரைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தலிபான் அமைச்சர்கள், ஐ.நா உயரதிகாரி ஒருவருக்கு தெரிவித்துள்ளனர். 

காபூலில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது தலிபான் அமைச்சர்கள் பலரிடமிருந்து ஊக்கமளிக்கத்தக்க பதில்கள் கிடைத்ததாக ஐ.நா அதிகாரி Martin Griffiths தெரிவித்துள்ளார்.

எனினும், அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்ற ஆப்கான் பெண்களுக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ஆப்கானிஸ்தான் பெண்கள் நெருக்கடியான பங்கொன்றை வகித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments