Friday, April 26, 2024
Homeவிளையாட்டுமகளிர் டி20 உலகக்கோப்பை - வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா.

மகளிர் டி20 உலகக்கோப்பை – வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா.

பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன்
பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

8வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த 10ம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில்,
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து களமிறங்கியது.
அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 156 ஓட்டங்கள் குவித்து இருந்தது.

20 ஓவர்களுக்கு 157 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி இலக்கை அடைய மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணியை 137 ஓட்டங்களில் வீழ்த்தியதன் மூலம் அவுஸ்திரேலிய
அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 வது முறையாக அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments