Friday, April 26, 2024
Homeசினிமாபுதிய அப்டேட்டை வெளியிட்ட "சூர்யா 42 " படக்குழு!

புதிய அப்டேட்டை வெளியிட்ட “சூர்யா 42 ” படக்குழு!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 42 என்று தற்காலிகமாக இத்திரைப்படம் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற 14.03.2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஒரு மாபெரும் நிகழ்வில் ஒரு பிரமாண்ட திட்டம். காத்திருப்பு முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments