Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்பாணந்துறை நகரில் கைவிடப்பட்ட வயதான பெண்மணி !

பாணந்துறை நகரில் கைவிடப்பட்ட வயதான பெண்மணி !

பாணந்துறை நகரில் கைவிடப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவர் நேற்று மீட்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர் .

கொழும்பைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டியை யார் அழைத்து வந்தாலும் பாணந்துறையில் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்கப்படும் வரை பனந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பாணந்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் சமிந்த பிங்துவின் ஆலோசனைக்கமைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இரேஷா குமாரசிங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் வயதான பெற்றோர் அல்லது உறவினர்கள் வீதியில் கைவிடப்படும் அவல நிலை காணப்படுகின்றது.

முதியோர்களை குழந்தைகள் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களுக்கு கொண்டு செல்லும் சம்பவமும் அதிகரித்துள்ளது.

முதுமையில் தத்தெடுத்து வளர்த்த பெற்றோரைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் குழந்தைகளின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments