Saturday, April 27, 2024
Homeஇந்திய செய்திகள்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு திட்டம் …!!7.5% வட்டி வெளியான சூப்பர் தகவல் .

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு திட்டம் …!!7.5% வட்டி வெளியான சூப்பர் தகவல் .

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என்ற பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமிகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். மேலும் இத்திட்டத்தில் 7.5% நிலையான வட்டி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என்ற திட்டம் பெண்களுக்கான சேமிப்பு திட்டம். அதிக வட்டியில் சிறு சேமிப்பு திட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

பெண்கள் அல்லது சிறுமிகள் பெயரில் இத்திட்டத்தில் கீழ் சிறு சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். 2025 ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். சேமிப்பு பணத்திற்கு 7.5% நிலையான வட்டி வழங்கப்படும். மேலும் இதில் சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் சலுகையும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சிறு சேமிப்பு திட்டமாக உள்ளதால் இத்திட்டத்தின் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வருவாயில் இருந்து சிறிய அளவு பணத்தைச் சேமித்து அதற்கு 7.5 % வட்டியைப் பெற முடியும். மேலும் சிறுமிகளின் எதிர்கால சேமிப்புக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்திக் குறுகிய கால சேமிப்பு பலனை அடையலாம்.

மேலும் மத்திய பட்ஜெட்டில் தற்போது உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் முதலீட்டு அளவை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரித்து அறிவித்துள்ளனர். தொடர்ந்து, ரூ.4.5 லட்சம் வரை சேமிக்கக்கூடிய தபால் கணக்கு மாத சேமிப்பு திட்டத்தில் தனி நபர் ரூ.9 லட்சம் வரை சேமிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். அதே போல், இணைந்த தபால் கணக்கு மாத சேமிப்பு திட்டம் அளவும் ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments