Saturday, April 27, 2024
Homeஇந்திய செய்திகள்பகவத் கீதை குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு !

பகவத் கீதை குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு !

பகவத் கீதை படிப்பதற்கும் மனப்பாடம் செய்வதற்கும் எளிமையாகவும் அழகாகவும் இயற்ற பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார் .
பகவத் கீதையை படிக்க படிக்க நல்லொழுக்கம் மிகுதியாகும் .நேர்கொண்ட சிந்தனை அதிகரிக்கும் என்றும் கீதை ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ரவி தெரிவித்தார்.

பகவத் கீதை கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் 11 வது நாளில், சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அதே போன்று இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாளை கீதா ஜெயந்தி என நாம் கொண்டாடுகிறோம்.

மகாபாரதத்தில் குருஷேத்திர போரின் போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு உபதேசித்ததே பகவத் கீதை. இது கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதா ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம். கீதா ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நாளை மோட்ஷ ஜெயந்தி என்றும் கூறப்படுகிறது.

கீதா ஜெயந்தி

கீதா ஜெயந்தி 2022 ம் ஆண்டில் கீதா ஜெயந்தி, டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்பட்டது. ஏகாதசி திதியிலேயே கீதை உபதேசிக்கப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் 03 ம் தேதியன்று காலை 5.39 மணி துவங்கி, டிசம்பர் 04 ம் தேதி காலை 5.34 வரை ஏகாதசி திதி உள்ளது. இந்த நேரத்தை கணக்கிட்டு கோவில்களில் கீதா ஜெயந்தி கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கீதா ஜெயந்தி நாளில் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டால் வாழ்வில் மேன்மையான இடத்தை பெற முடியும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடைய நினைப்பவர்கள் இந்த நாளில் கீதையை படிக்க துவங்கலாம். இந்த நாளில் சிறப்பு பஜனைகள், பூஜைகள் நடத்தி, அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்குவது வழக்கம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கீதை ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பகவத் கீதையை மனப்பாடம் செய்யும் வகையில் எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பில் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை என்றும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார். மக்களின் பங்களிப்பு அனைத்திலும் இருக்க வேண்டும். இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments