Saturday, April 27, 2024
Homeஇந்திய செய்திகள்நடுரோட்டில் கையில் உணவை வைத்து கதறியழுத பொலிஸ் உத்தியோகத்தர்! பரிதாப காட்சி

நடுரோட்டில் கையில் உணவை வைத்து கதறியழுத பொலிஸ் உத்தியோகத்தர்! பரிதாப காட்சி

உத்திர பிரதேசத்தில் காவலர் ஒருவர் தங்களது காவல்துறை கேன்டீன் சாப்பாட்டில் தரம் குறைவாக இருக்கிறது என கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் காவலராக பணியாற்றி வரும் மனோஜ் குமார். காவலர் கேன்டீன் சாப்பாடு எப்படி இருக்கிறது பாருங்கள் என சாலையில் வாகனங்களை வழிமறித்து புகார் கூற ஆரம்பித்தார்.

மேலும், நாங்கள் 12 மணிநேரம் வேலை செய்துவிட்டு வந்து இந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டுமாம். இந்த சாப்பாட்டை உங்கள் வீட்டு நாய்க்கு போடுங்கள்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், காவலர்களுக்கு தரமான உணவு வழங்க 30 சதவீத நிதி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இருந்தும் சாப்பாடு இப்படி தான் இருக்கிறது என கூறி அழ ஆரம்பித்து விட்டார். குறித்த காட்சி வைரலானதையடுத்து காவலருக்கே இந்தியாவில் இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments