Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்தேர்தல் செலவுகள் குறித்து அரசாங்க அச்சக திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்.

தேர்தல் செலவுகள் குறித்து அரசாங்க அச்சக திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படுவதாக என அரசாங்க அச்சகத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பத்து மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக பதிப்பக செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments