Saturday, April 27, 2024
Homeவாழ்வியல்குழந்தைகளுக்குப் பிடித்த பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ்.. வீட்டிலேயே ஈஸியா செய்ய ரெசிபி

குழந்தைகளுக்குப் பிடித்த பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ்.. வீட்டிலேயே ஈஸியா செய்ய ரெசிபி

உருளைக்கிழங்கு என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கில் செய்த பொரியல் கொடுத்து விட்டால் மீதமே வராது. அந்தளவிற்கு விரும்பிச் சாப்பிடுவார்கள். இவர்களுக்காகவே கடைகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ், பிங்கர் சிப்ஸ், உருளைக்கிழங்கு ரோல் என விதவிதமாக ரெசிபிகள் உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படுகிறது. இந்த வரிசையில் சுவை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் ரெசிபி மக்களிடம் பிரபலமாகியுள்ளது.

மாலை நேர ஸ்நாக்ஸ், சாப்பிட்டிற்கு கூட்டு என எல்லாவற்றிற்கும் நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். அந்தளவிற்கு இதன் சுவை கூடுதலாக இருக்கும். எனவே நீங்கள் குழந்தைகளுக்கு சுவையாக மற்றும் ஆரோக்கியத்துடன் கூடிய ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கை வைத்து செய்துப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த ரெசிபி நல்ல தேர்வாக அமையும். இதோ பார்த்தவுடன் வாயில் எச்சில் ஊற வைக்கும் பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் (Garlic Potato sticks) எப்படி செய்யலாம்? என இங்கே தெரிஞ்சுக்கோங்க..

பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் ( Garlic Potato sticks):

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு – 5

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – அரை கப்

சீஸ் – அரை கப்

இஞ்சி – சிறிதளவு

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

சோள மாவு – 5 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து 15 முதல் 18 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

இதனையடுத்து உருளைக்கிழங்கை தண்ணீரில் இருந்து அகற்றி, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் பூண்டு, கொத்தமல்லி இலை, சீஸ், இஞ்சி, மிளகாய் தூள் மற்றும் சோள மாவு ஆகியவற்றைச் சேர்ந்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு எப்படி இருக்குமோ? அந்த பதத்திற்கு உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து ஒரு சப்பாத்திக்கட்டை அல்லது ஒரு பலகையில் மழுது சிறிதளவு மாவு தடவி, மாவு பதத்திற்குப் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதில் வைத்து உருட்ட வேண்டும். பின்னர் சிறிய குச்சிகள் வடிவத்தில் கத்தியை வைத்து வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு குச்சிகளை உள்ளே போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இப்போது சுவையான பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் ரெடி. இதை மாலை நேர ஸ்நாக்ஸ் அல்லது குழந்தைகள் விருப்பப்படும் போது செய்துக்கொடுக்கலாம். நிச்சயம் விரும்பிச்சாப்பிடுவார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments