Friday, April 26, 2024
Homeஉலக செய்திகள்காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு!

காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தின் டெர்ஜூன் கஜா கிராமத்தை சேர்ந்த ஜஹ்ரா என்ற 54 வயதான பெண், கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில் ரப்பர் சேகரிக்க சென்ற பின்னர் காணாமல் போயியுள்ளார்.

அவர் காணாமல் போனதையடுத்து, குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதையடுத்து தஞ்சோங் ஜபுத் பராத் ரீஜென்சி பகுதியிலுள்ள அடர்ந்த காடுகளில் பொலிசாரும், உள்ளூர் மக்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜஹ்ராவின் செருப்பு, அரிவாள் என்பன கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அந்த இடத்திலிருந்து 30 மீற்றர்கள் தொலைவில் மலைப்பாம்மை கண்டனர்.
மரங்களிற்கு நடுவே வெட்டவெளியில் 22 அடி நீளமாக மலைப்பாம்பு ஒன்று வீங்கிய வயிற்றுடன் காணப்பட்டது. அதனால் நகர முடியவில்லை. மலைப்பாம்பு ஜஹ்ராவை கொன்றிருக்குமென மக்கள் சந்தேகித்தனர்.

இதையடுத்து, பாம்பை அடித்துக் கொன்று, அதன வயிற்றை கிழித்துப் பார்த்தனர். மலைப்பாம்பின் வீங்கிய பகுதியில் ஜஹ்ராவின் உடல் காணப்பட்டது.
மலைப்பாம்பின் வயிற்றிற்குள் 2 நாட்களாக ஜஹ்ராவின் உடல் இருந்தாலும், உடல் பெரும்பாலும் அப்படியே காணப்பட்டது. அவரது ஆடைகளும் பெருமளவிற்கு சேதமடையவில்லை.

டெர்ஜூன் கஜா கிராமத் தலைவர் ஆண்டோ கூறுகையில், ஜஹ்ராவை மலைப்பாம்பு தனது பயங்கரமான கோரைப்பற்களால் கடித்து விட்டு, அவரை மூச்சுத்திணறி உயிரிழக்க வைக்க, உடலை சுற்றி இறுக்கியிருக்கும் என்றார்.

ஜஹ்ரா சுவாதிக்க முடியாமல் போய், அவரை விழுங்க குறைந்தது 2 மணித்தியாலங்களையாவது மலைப்பாம்பு எடுத்திருக்கும் என்றார். இந்த சமயத்தில் ஜஹ்ரா கொடூரமான வேதனையை அனுபவித்திருப்பார்
அவரது உடல் பாம்பின் வயிற்றில் செரிமானம் அடைய குறைந்தது 2 வாரங்களாவது தேவைப்பட்டிருக்கும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments