Friday, April 26, 2024
Homeவாழ்வியல்இனி சாதாரண இரயில் பயண சீட்டை பயன் படுத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யலாம்!

இனி சாதாரண இரயில் பயண சீட்டை பயன் படுத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யலாம்!

சென்னை: சாதாரண ரயில் டிக்கெட் எடுத்தாலும் இனி முன்பதிவு பெட்டியில் அமர்ந்து செல்லும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே, இந்த திட்டம் பல மாதங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், பொதுமக்கள் பலருக்கு இதுகுறித்து தெரியவில்லை.இந்த திட்டத்தால் பள்ளி – கல்லூரி மாணவர்கள், முதியோர், பெண்கள் ஆகியோர் பலனடைவார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பலரும் விரும்பும் ரயில் பயணம்
பொதுவாக, பேருந்துகளை காட்டிலும் ரயில் பயணமே பொதுமக்கள் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. சாலை பள்ளங்களால் ஏற்படும் அலுக்கல் – குலுக்கல், அடிக்கடி வரும் நிறுத்தங்கள் போன்றவற்றை தவிர்ப்பதற்காகவே ரயில் பயணத்தை நாம் தேர்வு செய்கிறோம். ஆனால், நீண்டதூர பயணத்துக்கு மட்டுமே பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்த தூர பயணத்துக்கு பலரும் ரயில் பயணத்தை தங்கள் ஸில்ட்டில் வைத்துக் கொள்வதில்லை.

ஏன் ரிசர்வ் செய்ய வேண்டும்?
குறைந்த தூர பயணத்துக்கு ஏன் அதிக விலை கொடுத்து ‘ரிசர்வ்’ செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம் ஆகும். சரி., சாதாரண டிக்கெட் (அன்

வந்துவிட்டது ‘டிரிசர்வ்டு’ பெட்டிகள்
மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்துகொண்ட தெற்கு ரயில்வே, தற்போது அசத்தலான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சாதாரண டிக்கெட் எடுத்தாலும் விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கலாம் என்ற திட்டம்தான் அது. ‘ஏங்க.. அப்போ அதிக விலை கொடுத்து நாங்க ரிசர்வ் செய்யும் பெட்டியில், சாதாரண டிக்கெட்டில் அவர்கள் எப்படி பயணிக்க முடியும்’ என சிலரின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. கவலைப்பட வேண்டாம். இவர்களுக்காகவே முன்பதிவு பெட்டிகளில் இருக்கும் சில வசதிகள் கொண்ட ‘டிரிசர்வ்டு’ (De-Reserved) பெட்டிகளை ரயில்களில் இணைத்திருக்கிறது தெற்கு ரயில்வே நிர்வாகம். அதிகபட்சமாக, 100 கி.மீ. தூரம் வரை இந்த ‘டிரிசர்வ்டு’ பெட்டிகளில் பயணிக்கலாம்

ரிசர்வ்ட்) வாங்கிச் செல்லலாம் என்றால் அந்தப் பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். உட்கார்ந்து பயணிப்பது என்பது அரிதிலும் அதிகாகவே இருக்கும். இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவர். எனவேதான், குறைந்த தூர பயணத்துக்கு ரயில் பயணத்தை பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பதில்லை.

எந்தெந்த ரயில்கள்?
சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ்.11, 12 பெட்டிகளில் திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வரை இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம். எழும்பூர் – ராமேஸ்வரம் விரைவு ரயிலில் எஸ்.12, 13 பெட்டிகளில் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலிலும் இந்த ‘டிரிசர்வ்டு’ பெட்டிகளில் மக்கள் பயணிக்கலாம். மங்களூர் – எழும்பூர் மங்களூர் விரைவு ரயிலில், திருச்சி முதல் மங்களூர் வரை எஸ்.7, எஸ்.8, எஸ்.9, எஸ்.10 பெட்டிகளில் பயணிக்கலாம். அதே சமயத்தில், மங்களூரில் இருந்து எழும்பூருக்கு இந்த ரயில் வரும் போது, எஸ்.10 பெட்டி மட்டுமே ‘டிரிசர்வ்டு’ பெட்டியாக இருக்கும்.

தூத்துக்குடி, நாகர்கோவில்..
இதேபோல, தூத்துக்குடி – மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலில், தூத்துக்குடி முதல் மதுரை வரை எஸ்.4, எஸ்.10, எஸ்.11, எஸ்.13 பெட்டிகளில் பயணிக்கலாம். கன்னியாகுமரி – பெங்களூர் ரயிலில், கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை எஸ்.6, 7 பெட்டிகளில் பயணிக்கலாம். சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையேயான நாகர்கோவில் விரைவு ரயிலில் எஸ்.11, எஸ். 12 பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரை சாதாரண டிக்கெட்டில் பயணிக்கலாம். இந்த டிக்கெட்டுகள், சாதாரண டிக்கெட்டுகளை விட ரூ.20 மட்டுமே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments