Thursday, April 25, 2024
Homeதொழில்நுட்பம்Paytm போலவே புதிய கருவியை அறிமுகம் செய்யும் Google Pay!

Paytm போலவே புதிய கருவியை அறிமுகம் செய்யும் Google Pay!

இந்தியாவில் நாம் ஆன்லைன் மூலம் கடைகளில் பணம் செலுத்தும்போது நாம் பணம் செலுத்திய விவரத்தை கடைக்காரர்களுக்கு ஒரு தனிப்பட்ட வணிக கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது ஒரு சிறிய ஸ்பீக்கர் போன்ற கருவியை அனைவரும் பார்த்திருப்போம். அவை Paytm அல்லது Phonepe ஆகிய நிறுவனங்களின் தனிப்பட்ட சிறிய ஸ்பீக்கர் கருவிகள் ஆகும்.

இவை தனியாக நாம் பணம் செலுத்தியதும் நாம் எவ்வளவு பணம் செலுத்தினோம் என்பதை வணிகர்கள் அல்லது கடை உரிமையாளர்களுக்கு வாய்ஸ் மூலம் தெரியப்படுத்தும். இவை 2020 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் பிரபலமாக உள்ளது.

இதன் உதவியால் வணிகர்கள் அவர்களின் போனை திறந்து நோட்டிபிகேஷன் பார்க்காமலே அவர்களுடைய வங்கி கணக்கிற்கு பணம் வந்ததா? இல்லையா? என்பதை சுலபமாக தெரிந்துகொள்ளமுடியும்.

தற்போது ஆன்லைன் பணம் பரிவர்த்தனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் Google Pay நிறுவனமும் இதேபோன்ற கருவி ஒன்றை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த SoundPod கருவிகள் என்பது வணிகர்களின் கவனத்தை கொஞ்சமும் பாதிக்காமல் வியாபாரம் செய்ய உதவும். மேலும் இதனால் போலியான payment அல்லது பண பரிவர்த்தனை பெரும் அளவு தவிர்க்கப்படும்.

ஏற்கனவே இந்தியாவில் பல வணிகர்களிடம் இந்த கருவியை இலவசமாக வழங்கி Google நிறுவனம் சோதனை செய்துவருகிறது. இந்த கருவி வட இந்தியாவில் ஏற்கனவே பல நகரங்களில் அறிமுகம் ஆகிவிட்டது.

இந்த கருவியில் ஸ்பீக்கர் மட்டுமல்லாமல் கூடுதலாக LCD டிஸ்பிலே வசதி, பேட்டரி அளவு, நெட்ஒர்க் அளவு, மேனுவல் கண்ட்ரோல் வசதிகள் போன்றவை இடம்பெறும். இதில் கூடுதலாக QR Code ஸ்கேன் வசதியும் இருப்பதால் நாம் இதிலும் பணம் செலுத்தலாம். இவற்றில் NFC, Tap and Pay போன்ற வசதிகள் எதுவும் இடம்பெறாது.

இதுபோன்ற கருவிகள் இந்தியாவில் பெரும்பாலும் இலவசமாக வணிகர்களுக்கு வழங்கப்படுகின்றன. இல்லை என்றால் மாதம் 50 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை வாடகை பணம் வசூலிக்கப்படுகிறது. இதில் Google Pay நிறுவனம் வணிகர்களிடம் எப்படி நடந்துகொள்ளப்போகிறது என்பது தெரியவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments