முல்லைத்தீவில் மிளகாய்த்தூள் வீசி மருந்து கடை உடைத்து கொள்ளை!

19

முல்லைத்தீவு மாங்குளம் நகர்பகுதியில் மல்லாவி வீதியில் அமைந்துள்ள விவசாய மருந்து கடை உடைத்து பெறுமதியான விவசாய மருந்துகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

09.01.2021 அன்று அதிகாலை வேளை குறித்த கடை உடைக்கப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் மாங்குளம் நகர்பகுதியில் படையினரின் காவலரண் மற்றும் 500 மீற்றர் தூரத்தில் மாங்குளம் பொலீஸ் நிலையம் என்பன காணப்படும் நிலையில் கடந்த காலங்களில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இன்னிலையில் விவசாய மருந்து கடை உடைக்கப்பட்டு கடைக்குள் கறிதூள் வீசப்பட்டு தடையம் எடுக்கமுடியாத அளவிற்கு கடையில் இருந்து மருந்துகள் உடைத்து நிலத்தில் ஊற்றப்பட்டும் பெறுமதியான மருந்துப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டுமுள்ளன கொள்ளையிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ள பொருட்களின் பெறுமதி 18 இலட்சம் ரூபா என உரிமையாளரால் பெறுமதியிடப்பட்;டுள்ளதுடன் காப்புறுதி நிறுவனங்கள் கணக்கீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மாங்குளம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.