இரணைமடு குளத்தின் கீழ்பகுதியிலுள்ள மக்களிற்கு எச்சரிக்கை!

25

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்பகுதியிலுள்ள மக்களிற்கு வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வரத்து நீர் மற்றும் மழையை கருத்தில் கொண்டு, இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள், இன்று பகல் 12 மணிக்கு, 6 அங்குலங்கள் திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவின் அடிப்படையில், மேலும் நீரின் அளவு அதிகரிக்கலாம் எனவும் மக்களை விழிப்புடன் இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

அதற்கு அமைவாக, பன்னங்கண்டி, முரசுமோட்டை, சிவபுரம், கண்டாவளை, ஊரியான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.