போதைப்பொருட்களை உட்கொண்டு விட்டு செல்பி ஆசையில் உயிரை விட்ட யுவதி

8

பிரித்தானியாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான யுவதியொருவர் செல்பி எடுக்க முயன்ற போது, 250 அடி ஆழத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மடலின் டேவிஸ் (21) என்ற யுவதி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற சமயத்தில், சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள டயமண்ட் பேவில் சூரிய உதய புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக குன்றின் மீது ஏறிய போது தவறி விழுந்தார்.

கடந்த 12ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

பிரேத பரிசோதனையின் போது, அவர் அளவிற்கதிகமான போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.

அவர் ஆம்பெடமைன்கள், கோகோயின், கெட்டமைன் மற்றும் எம்.டி.எம்.ஏ ஆகியவற்றை எடுத்துக்கொண்டமை தெரிய வந்துள்ளது.