சித்ரா தற்கொலை செய்யவில்லை; நடந்தது கொலை-ஆதாரத்துடன் பரபரப்புத் தகவல்!

11

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சித்ராவின் சடல புகைப்படைத்தின் அடிப்படையில் பார்த்தால், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, அது கொலை என்று, பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ரா, நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அத்தோடு நேற்று வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு அவரது இறுதிப் பயணம் முடிந்தது.

எனினும், சித்ரா கன்னத்தில் நகக்கீறல்கள், முகத்தின் இடதுபக்கத்தில், நகக்கீறல் காணப்பட்டது.

தூக்குப் போட்டு தற்கொலை செய்தார் என்றால் கழுத்தில் அடையாளம் இல்லையே? யாருடனாவது ஏற்பட்ட தகராறில் முகத்தில் கீறல் ஏற்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்தன.

தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாரா, கணவருக்கும், தாயாருக்கும் இடையே நிலவிய மனக் கசப்பால் மனமுடைந்து இருந்தாரா போன்ற கேள்விகளும் எழுந்தன.

இந்த நிலையில்தான், நடிகை சித்ரா மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

தடயவியல் நிபுணர்கள்தான் எந்த ஒரு குற்றவழக்கின் விசாரணையிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

அப்படியான ஒரு தடயவியல் நிபுணரான தினேஷ் ராவ், இவ்வாறு ஒரு கருத்தை கூறியுள்ள நிலையில், சென்னை பொலிஸாரும் , பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எனவே சித்ரா மரண வழக்கு பல திருப்பங்களை சந்திக்க உள்ளது.