கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதிய டிப்பர்!

13

கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில், பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர், புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.