கிளிநொச்சியில் கொரோனா தோற்றாளருடன் தொடர்புடைய 25 பேர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்!

10

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் பிரிவில் இன்று(10) தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட குறித்தநபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பாரதிபுர இளைஞனுடன் தொடர்புடைய 25 பேரும் அவர்களுடைய வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டு சுகாதாரத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனால் குறித்த 25 பேரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மாற்றுவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அதுதொடர்பில் அனுமதி கிடைக்கத் தாமதமாவதால், மாங்குளம் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை விடுதிக்கு அவர்கள் 25 பேரும் இன்று மாலை தொடக்கம் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.