மெக்சிக்கோவில் இணையத்தில் மிரட்டும் போதைப்பொருள் கடத்தல்காரா அழகி!

12

சில காலத்தின் முன் யாழ்ப்பாண யுவதியொருவர் கையில் வாள், கைக்கோடாரிகளுடன் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவில் இயங்கிய யுவதியே இவர்.

பின்னர் சிறையெல்லாம் சென்றார்.

தமிழ் சினிமா கவர்ச்சிக்கன்னிகளை விட தாராளமான இறக்கத்துடன் பெனியன் அணிந்து, கையில் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுக்கும் அழகியை உலகம் ஆர்வத்துடன் பார்த்து வருகிறது. வெளியார்தான் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

ஆனால் மெக்சிக்கோ மக்கள் பீதியுடன் உள்ளனர்.

காரணம், அங்குள்ள பிரபலமான போதைப்பொருள் கடத்தல், கொலை, கடத்தல் கும்பலொன்றின் உறுப்பினரே அவர்.

லா சோலிடா என்ற பெயரில் இணையத்தில் தன்னை அறிமுகப்படுத்திய அந்த அழகி, வெளியிடும் கவர்ச்சிப் படங்கள் ஒவ்வொன்றிலும் தனது எதிர் குழுவை சீண்டும் வசனங்களை சேர்க்கிறார்கள்.

மெக்சிக்கோவில் இயங்கும் லாஸ் வயக்ராஸ் குற்றவியல் குழுவில் உறுப்பினராக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த குழுவின் போட்டிக்குழுவான ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டலின் (சி.ஜே.என்.ஜி) குழுவை, கோழைகளின் கூட்டமாக வர்ணிக்கும் வசனங்களை தனது கவர்ச்சி படங்களுடன் சேர்க்கிறார்.

மெக்சிக்கோவின் மைக்கோவாகன் மாகாணத்தில் சி.ஜே.என்.ஜி மற்றும் கார்டெல்ஸ் யூனிடோஸ் (சி.யு) கும்பலிற்கிடையில் பயங்கரமான மோதல் நடந்து வருகிறது. மெக்சிக்கோவில் அண்மையில் மர்ம புதைகுழிகள் பல கண்டறியப்படுவதும், இந்த பாதாள உலகக்குழுக்களின் மோதலின் விளைவுதான்.

போட்டிக்குழுவிற்கு ஆதரவளித்தார், தொடர்பிலிருந்தார் என சந்தேகித்தாலே, தூக்கிச் சென்று சங்கை அறுத்து, புதைத்து விடுவார்கள்.

இந்த கொடிய கும்பல் குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை.

சி.ஜே.என்.ஜி குழு சமீபத்தில் ஒரு புதிய அறிவித்தலை விடுத்திருந்தது. “உள்ளூர் மக்களை கார்டெல் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க போகிறோம்“ என அறிவித்து, புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

லா சோலிட்டாவின் கவர்ச்சியான இடுகைகள் போட்டி கும்பல்களுக்கு இடையில் வளர்ந்து வரும் சமூக ஊடகப் போரின் ஒரு பகுதியாகும்.

தனது பல புகைப்படங்களை லா சோலிடா வினோதமான ஈமோஜிகளால் முகத்தை மறைக்கிறார்.

லா சோலிடாவின் குழு இப்பொழுது மெக்சிக்கோவில் அதிக கொலையை செய்து வருகிறது. போட்டிக்குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், 5 சிறார்கள் உள்ளிட்ட 9 பேரை சமீபத்தில் சுட்டுக் கொன்றது.

மெக்சிக்கோ பாதாள உலகக்குழுக்களின் கவர்ச்சி தாரகைகள் இணையத்தில் பரபலமாவது இதுதான் முதன்முறையல்ல. சி.ஜே.என்.சியில் ஏற்கனவே இருந்த கவர்ச்சி தாரகை லா கேட்ரினா என்ற பெண் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.