வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் மனைவியைப் பிரிந்து தனிமையில் வாடிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!

21

வவுனியாவின் செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் வீட்டு விறாந்தையில் இன்றைய தினம் தூக்கில் சடலமாக திங்கிய நிலையில் காணப்பட்டபோது அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய சின்னையா தெய்வேந்திரன் என பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது. குறித்த நபரின் மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வாழ்ந்து வந்துவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.