தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா!

3

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை தனது ருவிற்றர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார்.

அவரது புதிய படமான”ஆச்சார்யா” படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, அவர் தொற்றுடன் இருப்பது தெரிய வந்தது.

அவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. தற்போது வீட்டில் தனிமைப்பட்டுள்ளார். கடந்த 5 தினங்களில் தன்னை சந்தித்த அனைவரையும் தனிமைப்படுமாறு கோரியுள்ளார்