முல்லைத்தீவுவில் வீட்டுக் காணியிலிருந்து தமிழன் குண்டு ஒன்று மீட்பு!

59

முல்லைத்தீவு மாமூலைப் பகுதியில் உள்ள வீட்டுக் காணியிலிருந்து கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காணியினை சுத்தம் செய்யும் போதே நேற்று இக் குண்டு மீட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காணியின் உரிமையாளர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதனை மீட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிசார் தெரிவித்தனர்.