கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் மீட்பு!

53

கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன.

இவ் மனித எச்சங்கள் பளை – தம்பகாமம் குளத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை மழை பெய்த பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்ற சிலர் அங்கு துர்நாற்றம் வீசியமை தொடர்பில் அவதானித்த போது நாடி உள்ளிட்ட சில எலும்புகள் உள்ளிட்ட மனித எச்சங்களும் சேட் மற்றும் சறம் போன்ற ஆடைகளையும் இனம் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கும், கிராம சேவகருக்கும் தகவல் வழங்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு போட்பட்ட நிலையில் தொடர்ந்து காட்டுப்பகுதியில் பொலிஸார் தேடுதல் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது காட்டுப்பகுதியில் இருந்து மேலும் சில எலும்புகளும் மண்டையோடும் மீட்கபட்டுள்ளன.

தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவ் எச்சங்கள் மாமுனை, செம்பியன் பற்றை சேர்ந்த சுகவீனமுற்ற மனநலம் பாதிக்க்பட்ட சுமார் 50 வயது மதிக்கதக்க க. சுந்தரமூர்த்தி என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றையதினம் சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சிவசுப்பிரமணியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி பார்வையிட்ட பின்னர் இறந்தவரின் உறவினர்கள் மூலம் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மனித எச்சங்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.