பேஸ்புக் காதலனை நம்பி நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய யுவதியை மிரட்டி படுக்கையறை அழைத்த இளைஞனுக்கு நேர்ந்த கெதி!

177

பேஸ்புக்கில் அறிமுகமான காதலனிற்கு குளியலறையில் எடுத்த நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய யுவதியொருவர், பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களை காண்பித்து தன்னை உடலுறவிற்கு நிர்ப்பந்திப்பதாகவும், மறுக்கும் பட்சத்தில் இணையத்தளங்களில் வெளியிட போவதாகவும், அந்த நபர் தன்னை மிரட்டி வருவதாக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

யுவதி பாணந்துறையை சேர்ந்தவர். இளைஞன் நீலபனகொட பகுதியை சேர்ந்தவர்.

இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலர்களாக இருந்ததாகவும், இதன்போது யுவதி நிர்வாண படங்களை அனுப்பி வைத்ததாகவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பின்னரும், அந்த படங்களை வெளியிடப் போவதாக இளைஞன் மிரட்டி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்திடமிருந்து அறிக்கை பெற்று, இளைஞன் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.