சிவாஜிலிங்கம் உள்ளேயா? வெளியேயா? தீர்ப்பு 1.30 மணிக்கு

2

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அவரை விளக்கமறியலில் வைக்க பொலிசார் கோரிக்கை விடுத்தனர். எனினும், சிவாஜிலிங்கம் சார்பில் முன்னிலையாகிய என்.சிறிகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவிக்க கோரினர்.

இரு தரப்பு கோரிக்கையையும் செவிமடுத்த நீதிமன்றம், தீர்ப்பை மதியம் 1.30மணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.