பூச்சி கடித்ததால் சிறுநீரகம் செயலிழந்து 18 வயது இளம் பெண் பலி!

0

பூச்சிக் கடித்ததால் ஏற்பட்ட அரிய வகை சிறுநீரக நோயால் 6 வருடம் போராடியபர் சாண்ட்ரா ஆன் ஜெய்சன் அவருக்கு வயது 18. இந்த மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளர். இதுகுறித்து சாண்ட்ராவின் தந்தை ஜெய்சன் தாமஸ் கூறுகையில்,

கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊரான கேரளத்திற்கு வந்தபோது பூச்சி கடித்ததால் இரத்த நாளங்களின் வீக்கம் சம்பந்தப்பட்ட ஹெனோச்-ஷொன்லின் பர்புரா (எச்எஸ்பி) நோய் ஏற்பட்டதாகவும், மேலும் இந்த நோயால் சாண்ட்ரா மூளையில் ஒரு வடு, பார்வை இழப்பு மற்றும் அவரது உடல் முழுவதும் வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் எனவும் கூறினார்.

இந்நிலையில் 2018 க்குள், அவரது இரு சிறுநீரகங்களும் 70 சதவீதம் சேதமடைந்த நிலையில் கேரளாவில் சிறுநீரக நன்கொடையாளர் ஒருவர் கிடைத்ததையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஜூன் 21 அன்று கேரள வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென்று சாண்ட்ராவிற்கு திங்கள்கிழமை மூச்சுத் திணரல் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் இரத்த அழுத்தம் குறைந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று கூறியுள்ளார்கள்.