உணவை அதிகமாக சாப்பிட்டு விட்டீர்களா? உடனடியாக இதனை செய்திடுங்கள்!

33

ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும் கூட எதையும் அளவோடு சாப்பிடா விட்டால், அது நமக்கு நஞ்சாக மாறிவிடும்.

நம்மில் சிலர் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை விட அதிகமாக சாப்பிட்டு அவஸ்தைப்படுவது உண்டு.

அந்த வகையில் ஒருசில உணவுகளை அதிகமாக சாப்பிட்டு விட்டால், அதற்கான சிறந்த நிவாரணம் இதோ!

 • மாங்காய் அல்லது மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் பால் டம்ளர் குடிக்க வேண்டும்.
 • உணவில் அதிக நெய் சேர்த்து சாப்பிட்டு விட்டால், அதற்கு ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.
 • பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.
 • கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
 • செரிமான ஆகாத உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால், அதற்கு சுக்கு வெல்லம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
 • அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க சிறிதளவு ஸ்வீட் சாப்பிட வேண்டும்.
 • தேங்காய் அல்லது தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால், அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
 • குடல் புண் அதிகம் இருந்தால், அதற்கு அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிட்டால் சரியாகும்.
 • மஞ்சள் காமாலை நோயினால் பாதிப்படைந்திருந்தால், வெள்ளை முள்ளங்கியை சாலட் செய்து சாப்பிடுவது சிறந்தது. அல்லது தயிர்பச்சடி கூட சாப்பிடலாம்.
 • அதிகப்படியான காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
 • உடலில் அதிக கொழுப்பு இருந்தால், அதற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம்.
 • உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர, இளநீர் அல்லது வெந்தயம் ஊறவைத்த நீர் ஆகிய பானத்தை அருந்தலாம்.