வவுனியாவில் பெண் செய்த அலங்கோலம்

0

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று (05) மாலை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது

மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற பெண்ணை கைது செய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கேரளா கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.