யாழில் வாள்வெட்டு காவாலிகளை துரத்திப் பிடித்த புத்துார் இளைஞர்கள்!!

20

சமூகவிரோத செயற்பாடுகளான வாள்வெட்டு,கொள்ளை அடித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி பகுதியில் இருந்து புத்தூர் கலைமதி ஊடாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் இருவரை புத்தூர் கலைமதி பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எட்டுப்பேர் கொண்ட குழுவினரே வாள்களுடன் சிறுப்பிட்டி பகுதியூடாக வரும் போது இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி சென்ற ஐவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அச்சுவேலிபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.