உங்க முகம் கரும்புள்ளிகளுடன் பார்க்கவே அசிங்கமா இருக்கா?

194

நம்முடைய சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜாதிக்காய் பயன்படுகிறது.

முகத்தில் இருக்கும் பருக்கள், சரும கோடுகள், சரும அழற்சி இவற்றை ஜாதிக்காய் பவுடர் கொண்டே விரட்ட முடியும்.

இந்த ஜாதிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செம்பு ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன.

ஜாதிக்காய் உங்க சருமத்திற்கு ஏதுவான அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கூடியது.

ஜாதிக்காய் ஆயுர்வேத வழியில் பருக்களை விரட்ட பயன்படுகிறது.

முகப்பரு பாதிப்புக்குள்ளான துளைகள் அல்லது எண்ணெய் சருமம் உங்களுக்கு இருந்தால், ஜாதிக்காய் உங்களுக்கு நிச்சயமாக கை கொடுக்கும்.

ஜாதிக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு முகப்பருவுக்கு வழிவகுக்கும் அசுத்தங்களை அகற்றவும் உதவுகிறது.

ஜாதிக்காய் தோல் அழற்சி பிரச்சினைகள், தடிப்புகள் மற்றும் சரும அரிப்பை போக்க உதவுகிறது.

இது இயற்கையிலேயே சரும அழற்சியை போக்கும் தன்மை கொண்டு இருப்பதால் சரும ஆரோக்கியத்தை காக்கிறது.

கரும்புள்ளிகளுக்கு ​எப்படி பயன்படுத்துவது?
  • 1 டீ ஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், 3 – 4 சொட்டு ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து காய வையுங்கள்.
  • நன்றாக காய்ந்த பிறகு நன்றாக தேய்த்து கழுவுங்கள்.
  • இது உங்க சருமம் இளமையாகவும் புத்துணர்வாகவும் இருக்க உதவும்.