யாழில் எண்ணப்படும் வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது!

589

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஊர்காவற்றுறையில் தொகுதிக்காக எண்ணப்பட்டுவருகின்ற வாக்குகளின் எண்ணிக்கையில் ஈபிடிபி கட்சியினருக்கான வாக்குகள் ஏனைய கட்சிகளை விட அதிக அளவில் காணப்பட்டுவருவதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் ஆறாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஈபிடிபி கட்சி முதல் இடத்திலும் 4000 வாக்குகளை அண்மித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாம் இடத்திலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2000 வாக்குகளை அண்மித்த வாக்குகளுடனும் காணப்படுவதாக வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் அண்ணளவாக சராசரியான வாக்குகளுடன் காணப்படுவதாக தெரியவருகிறது.

குறிப்பு

மேலே குறிப்பிட்ட தகவல்கள் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் ஊாடக கிடைக்கப்பெற்ற தகவல்கள் இல்லை

முழுமையான தேர்தல் அறிவுப்பகளை உடனுக்குடன் தருவோம். தொடர்ந்து காத்திருங்கள்