வவுனியாவில் மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

49

வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 19 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.