யாழ் வடமராட்சியில் 17 வயது மாணவன் தற்கொலை!

0

வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரியில் க பொ -தர பரீட்சையில் தோற்றிய மாணவர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7-30 மணியளவில் வீட்டில் விபரீத முடிவுஎடுத்து உயிரிழந்துள்ளார்

கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி வீதியில் இச்துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது

சம்பவம் தினம் நன்றாக விளையாடிக்கொண்டு இருந்த குறித்த மாணவர் தீடிர்ரென பிழையான முடிவு எடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குறித்த மாணவன் திடீரென இந்த முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆர்த்தியன் வயது 17 என்ற மாணவன் உயிரிழந்தவராவார்.

குடும்பத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றை அவரின் நண்பர்கள் நையாண்டி பண்ணியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக சடலம் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.