இந்தியாவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலி!

24

ஆந்திராவில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 தொழிலாளர்கள் பலியாகினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 தொழிலாளர்கள் பலியாகினர்.

சரக்கு பெட்டகங்களை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.