சயனைடு உடலுக்குள் சென்றவுடன் என்ன நடக்கும்? போர்களத்தில் கழுத்தில் குப்பியாக அணிய இது தான் காரணமா?

174

7 ஆம் அறிவு படத்தில், இன்னும் என்ன தோழா பாடலின் இடையில் வரும் “கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கிறோம்” என்ற பாடல் வரிகளின் அர்த்தம் இதை வைத்துத்தான் எழுதியிருக்க வேண்டும் என்று ஈழத்தமிழ் மக்கள் கருதுகின்றனர். போர் களங்களில் எதிரிகளிடம் சிக்க நேரிட்டால், கழுத்தில் உள்ள சயனைடு குப்பியை வாயில் கடித்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள். எந்த நிலையிலும் தன் நாட்டு இரகசியம் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்ற வீர உணர்வின் சாட்சி அது.

சரி! ரொம்ப உணர்வுப்பூர்வமாக போக வேண்டாம். வேறு விஷயத்திற்கு வருவோம். கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும், சயனைடு குப்பியை கடித்தவுடன் எப்படி உயிர் போகிறது? அந்த நேரத்தில் உடலுக்குள் என்ன மாற்றம் நடக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக நம்முடைய உடலில் எல்லா செல்களுக்கும் ஆக்சிஜன் இருந்தால் தான் வேலையே நடக்கும். நமக்கு உயிர் இருப்பது போல, செல்களுக்கு ஆக்சிஜன் வேண்டும். சுவாசிக்கும் காற்றில் இருந்து உறிஞ்சப்படும் ஆக்சிஜன், ஹீமோகுளோபின் மூலம் உடல் செல்களுக்கு தூக்கிச்செல்லப்படுகிறது.

ஹீமோகுளோபின் எந்த அளவுக்கு வேகமாக செயல்படுகிறதோ, அந்த அளவுக்கு உடல் செல்கள் உற்சாகமாக இருக்குமாம். சிலர் இயற்கையாகவே சோர்ந்த நிலையில் இருப்பதை பார்த்திருப்போம். அதற்கு காரணமும் இந்த ஹீமோகுளோபின் குறைபாடு தான். போதிய அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால், ஆக்சிஜன் ஓட்டம் குறைந்து உடல் சோர்வடைந்துவிடும். இதே பார்முலா தான் சயனைடு உடலுக்குள் நுழையும்போது நிகழ்கிறது. சயனைடு இரத்தத்தில் கலந்த உடனே, ஹீமோகுளோபின் தன்னிலை மறந்துவிடும்.

ஆக்சிஜனை தூக்கிச்செல்வது தான், தன்னுடைய வேலை என்பதை விட்டுவிட்டு, சயனைடுடன் இணைந்து வேதி வினை புரிய ஆரம்பிக்கும். ஹீமோகுளோபின் குறைந்தாலே உடல் சோர்வடையும் என்று இருக்கும் போது, மொத்த ஹீமோகுளோபினும் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தினால் என்ன ஆகும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். அதனால் தான் சயனைடு கடிக்கப்பட்டவுடன் உயிர் பிரிகிறது. இதன் சுவையை கண்டறிகிறேன் என்று சொல்லி, உயிரை விட்ட ஆராய்ச்சியாளர்களின் வரலாறும் உண்டு. ரொம்ப மோசமான ஆள் சார் இந்த சயனைடு.