கொடுத்த பணம் திரும்பி வரவில்லையா? செவ்வாய்க்கிழமையில் இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்க

114

நாம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் நாம் பணமாக ஒருவருக்கு கொடுக்கும் பொழுது நிறைய பிரச்சனைகள் வந்து சேரும் அதைத் திரும்பப் பெறுவதற்கு நாம் படாதபாடு பட வேண்டி இருக்கும். இதோ தருகிறேன், அதோ தருகிறேன், பிறகு தருகிறேன் என்று ஏதாவது ஒரு காரணம் கூறி இழுத்தடித்துக் கொண்டே இருப்பார்கள்.

பணமும் கொடுத்துவிட்டு, கெட்ட பெயரும் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிவிடும். இதுவும் கர்மவினை பயனாகத் தான் சாத்திரம் கூறுகிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வேறு ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அதை மீட்டெடுக்க எளிய மந்திரம் உண்டு.

செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். செவ்வாய் ஹோரை எந்த நேரத்தில் வருகிறது என்று உங்கள் நாள்காட்டியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் முன்னர் குளித்து தயாராக இருந்து கொள்ளுங்கள். அரிசியை அட்சதையாக தயார் செய்து கொள்ளுங்கள்.

அதில் சம அளவு எள்ளை கலந்து கொள்ளுங்கள். எள் கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி எதுவாயினும் பரவாயில்லை. இக்கலவையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லுங்கள். யாரிடம் இருந்து உங்களுக்கு பணம் வர வேண்டி இருக்கிறதோ அவர்களின் பெயரை சூரியனை பார்த்து மூன்று முறை உச்சரித்து தூவி விடவும். பின்னர் கீழே வந்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு கீழ்வரும் மந்திரத்தை 21 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்: ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!

இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். நிச்சயம் பலன் தரும் எளிய மந்திரமாக இருக்கிறது. நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையில் இருந்தாலும், உடனடியாக உங்கள் பணம் திரும்ப கிடைக்கும். நியாயமான முறையில் பணம் சம்பாதித்து மீண்டும் அது திரும்ப கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தால் நிச்சயம் இந்த பரிகாரம் செய்வதன் மூலம் பலனடைவீர்கள்.