யாழில் பொலிஸாரால் துரத்திச் சென்ற இளைஞன் விபத்தாகி வைத்தியசாலையில்!

614

யாழ்.மத்திய கல்லுாரிக்கு அருகில் இன்று காலை கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில் எதிரே வந்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொாடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.