Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்!

600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்!

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பான பல்வேறு விபத்துக்களில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல், கால்பந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, கத்தாரில் 6,500 கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்துகளில் இறந்துள்ளனர் என்று ஆசிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், 2014 ஆம் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இலங்கை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. உயிரிழந்த இலங்கையர்களில் 439 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இழப்பீடு வழங்கியுள்ளது.

அதன் தரவுகளின்படி நட்டஈடு வழங்கப்பட்ட 439 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர், பதிவு செய்யாமல் வெளிநாட்டில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை எனவும், 12 வருடங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments