நெத்தலியாற்றில் கூட்டமைப்பு உறுப்பினர் தயவில் இயங்கும் கசிப்புக் குதங்கள்!

460

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு,நெத்தலியாறு,பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவருவதால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் நெத்தலிஆற்றுப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கை;ககாக புதுக்குடியிருப்பு பொலீஸ் குழுவினர் (07.07.2020) குறித்த பகுதியினை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது

அங்கு பாரியளவில் சட்டவிரோதமாக கசிப்பு செய்யப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பொலீசாரை கண்டதும் தப்பி ஒடியுள்ளார்கள்.

இதன்போது 5பெரல் கோட உள்ளிட்ட கசிப்பு காச்ச பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட 10 பரல்கள்,50 லீற்றர் கசிப்பு என்பன பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கசிப்பு உற்பத்தி கூட்டமைப்பின் உள்ளுராட்சி உறுப்பினரான கந்துவட்டி ஜீவனின் தயவிலேயே நடைபெறுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தகவல் தருகிறார்.

குறித்த ஜீவனே கிளிநொச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனின் கையாளாக செயற்படுவதும் குறிப்பித்தக்கது.