சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1,102 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்!

20

நாடளாவிய ரீதியில் கடந்த 4 வாரங்களாக சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1,102 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 688 சிம் அட்டைகளும், 283 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வெலிக்கட மகளிர் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 28 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.