தன்னைவிட 40 வயது அதிகமுடையவரை காதலிக்கும் பிரியா வாரியர்?

356

ஓவர் நைட்டில் ஒபாமா அவர்கள் என பல பேர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே போல் ஒரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்றால் அது பிரியா பிரகாஷ் வாரியர்(Priya Prakash Varrier) தான்

மலையாளத்தில் உருவான ஒரு அடர் லவ் படத்தில் உருவாகி இருந்த ஒரே ஒரு காட்சியின் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்து விட்டார். ஆனால் அதன்பிறகு அவரை கலாய்த்து மீம்ஸ் வருவதெல்லாம் வேறு விஷயம்.

அந்த படத்தில் மூலம் பேமஸான பிரியா பிரகாஷ் வாரியர் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் இவர் நடித்துள்ள படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதமாக மலையாளத்தில் 40 வயது ஆண் 21 வயது பெண்ணை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். முதலில் பிரியாவாரியர் மறுத்தாராம்.

சம்பளம் கொஞ்சம் சேர்த்து கொடுக்கிறேன் என்று கூறியதால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இதே மாதிரி ஒரு கதை பிரகாஷ்ராஜ் நடிப்பில் தமிழில் விடுகதை என்ற பெயரில் உருவாகியது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் அனூப் மேனன். அடுத்ததாக இவர் நடிக்கும் இப்படத்தில்தான் பிரியா பிரகாஷ் வாரியர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இது சமுதாய சீர்கேடு எனும் அளவுக்கு பிரச்சனையை கிளப்பியுள்ளது இந்த படத்தின் கதை.

இது பல பெண்களின் வாழ்க்கை முறையை மாற்றி விடும் ஆகையால் இந்தக் கதையை படமாக்க விடமாட்டோம் என மலையாளத்தில் ஒரு குரூப் போர்க்கொடி தூக்கியுள்ளது. பிரியா வாரியர் நடிக்கும் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ சர்ச்சைகள் மட்டும் வெளியாகி அவரது கேரியருக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறது.