Home இலங்கை செய்திகள் விடுதலைப்புலிகள் ஒரே இரவில் அதிகபட்சம் எத்தனை படையினரை கொன்றனர்? கருணா சொல்வது உண்மையா? பொன்சேகா

விடுதலைப்புலிகள் ஒரே இரவில் அதிகபட்சம் எத்தனை படையினரை கொன்றனர்? கருணா சொல்வது உண்மையா? பொன்சேகா

242

விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாக இருந்து அரசாங்க ஆதரவாளராக மாறியவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா , தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஒரே இரவில் 2000௩000 பேரைக் கொன்றதாக சமீபத்தில் கூறியிருந்தார். அவர் கூறுவதில் உள்ள உண்மை என்ன என்று 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தி முடித்தவரான இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விவரித்தார்.

ஆணையிறவு பகுதியில் நடந்த போரில் தாம் இந்த அளவு ராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இவர் தற்போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவராகவும் உள்ளார். இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான இராணுவத்தில் கொல்லப்படவில்லை என்கிறார் பொன்சேகா.முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட 1200 இராணுவத்தினர் ஒரே நேரத்தில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

இந்த தொகையே இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் ஒரே நேரத்தில் அதிகளவிலான இராணுவத்தினர் உயிரிழந்த நிகழ்வு எனவும் சரத் பொன்சேகா கூறினார். அதே போன்று கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் வசம் 600 போலீஸ் உத்தியோகத்தர்கள் சிக்குண்டதாகவும், அவர்களையும் விடுதலைப் புலிகள் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை போலீஸ் வரலாற்றில் ஒரே தருணத்தில் அதிகளவிலான போலீஸார் உயிரிழந்த நிகழ்வு இதுவே என சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.